ஒளிமயமான வாழ்விற்கு.... விளக்கேற்றுங்கள்!
நாம் செய்யும் பாவங்களே துன்பங்களுக்கு காரணம். கடன், மன அமைதியின்மை, தம்பதி இடையே ஒற்றுமைக் குறைவு, உடல் உபாதைகள், குழந்தைகளால் கவலை என்று பல துன்பங்கள் இருக்கின்றன. இதிலிருந்து விடுபட தினமும் அல்லது குறிப்பிட்ட தினங்களில் கோயில்களில் நம்பிக்கையுடன் விளக்கேற்றுங்கள். நம்பிக்கையுடன் விளக்கேற்றுங்கள். ஒளிமயமான வாழ்க்கை அமையும்.
* ஞாயிறு – இதயம், வயிறு, இரத்தம், நரம்பு சம்பந்தமான நோய், நாத்திக எண்ணம், பித்ருதோஷம்
* திங்கள் – கவலை, பயம், தாழ்வு மனப்பான்மை, குழந்தைகளின் மனவளர்ச்சி இன்மை
* செவ்வாய் – பெண்களுக்கு திருமணம் தடைபடுதல், செவ்வாய் தோஷம், முன்கோபம், அவசர புத்தி, பிடிவாதம், ஜாதகத்தில் கேதுவால் ஏற்படும் தோஷம்.
* புதன் – படிப்பில் தடை, ஞாபக மறதி, சகவாச தோஷம்.
* வியாழன் – ஆண்களுக்கு திருமணம் தடைபடுவது, குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை, புத்திர தோஷம், குழந்தைகளால் பிரச்னை.
* வெள்ளி – தம்பதி இடையே ஒற்றுமை குறைவு, கடன் பிரச்னை, மனவேதனை.
* சனி – நீண்ட ஆயுளுக்கு, உடல்நலமின்மை, விபரீத நோய்கள், தொழில் பிரச்னைகள், வேலையில் நிரந்தரமின்மை, ஜாதகத்தில் ராகுவால் ஏற்படும் தோஷம்.