உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரெங்கன் கோயிலில் மகாகும்பாபிஷேகம்

கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரெங்கன் கோயிலில் மகாகும்பாபிஷேகம்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரெங்கன் கோவிலில்  மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி பாண்டுரெங்கன் கோவிலில் இன்று (11ம் தேதி) காலை 11-ம் கால யாகசாலை பூஜையும், பூர்ணாஹூதியும் நடைபெற்றது. பின்னர்  யாகசாலை மண்டபத்திலிருந்து மங்கல வாத்தியம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. பரனூர் மகாத்மா ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள், துக்காராம் மகராஜ், சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராம தீட்சிதர், கோயில் ஸ்தாபகர் ப்ரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆகியோர் முன்னிலையில் கோவிலின் வானுயர்ந்த விமான  கலசங்களுக்கு சிறப்பு பூஜையுடன்   புனிதநீர்  ஊற்றி, புஷ்பார்ச்சனை செய்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் மூலவர்  பாண்டுரங்க சுவாமிகள் மற்றும் ருக்மிணி தாயார் ஆகியோருக்கு சிறப்பு  திருமஞ்சனம் செய்து துளசி, மலர் அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து, மாலை திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் கோவிலில், கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து, சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !