ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1446 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர்-பரமக்குடி சாலை துணை மின் நிலையம் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலில் மாசிமாதம் முதல் தேதி முன்னிட்டு முதுவை ஐய்யப்ப பக்தர்கள் சார்பில் சிறப்புபூஜை நடந்தது.குருநாதர் திருமால் தலைமையில் காலை 5.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கி சிறப்புபூஜை நடந்தது. பின்பு ஐயப்பனுக்கு நெய்,சந்தனம்,மஞ்சள், இளநீர் உட்பட 17 வகையான அபிஷேகம் நடந்தது.ஐயப்பன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு படிபூஜை, தீபாராதனை நடந்தது.முதுவை ஐய்யப்ப பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.