செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1446 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலவ நத்தத்தில், செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் புண்ணியாகவாசனம், அனுக்ஞை, அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம், வாஸ்து சாந்தி உட்பட பூஜைகள் நடந்தது. நேற்று காலை புனித நீரால் கலசங்களுக்கு அபிஷேக ஆராதனையுடன், மகா கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.