திருமலையில் அனுமன் பிறந்த இடத்தில் நாளை பூமி பூஜை
திருப்பதி: அனுமன் பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள திருமலை அஞ்சனாத்ரி மலையில் நாளை (16ம் தேதி) பூமி பூஜை நடைபெற உள்ளது.
அனுமன் பிறந்த இடம் குறித்து கடந்த பல ஆண்டுகளாக சர்ச்சை நிலவி வந்தது.இதற்கு முடிவு காணும் வகையில் கடந்த ஜூலை மாதம் 30,31 ந்தேதி நடைபெற்ற கருத்தரங்கில் பல்வேறு மடாதிபதிகள்,தொல்லியல் துறை அறிஞர்கள்,பீடாதிபதிகள்,அறிஞர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.இந்த கருத்தரங்கில் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில்தான் அனுமன் பிறந்தார் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பல்வேறு தரவுகள் மூலமாக தெரவிக்கப்பட்டது. திருமலையில் உள்ள பல்வேறு மலைத்தொடர்களில், அஞ்சனாத்ரி மிகவும் பிரபலமானது மற்றும் திருமலை மலைகளின் முன்னோடியாகும். இது தொடர்பாக நாளை அனுமன் பிறந்த இடமான அஞ்சனாத்ரியில் நாளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பூமி பூஜை நடைபெறுகிறது,விரைவில் இங்கு பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சிலையும்,பூங்காவும் அமைக்கப்படும்.