உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிரங்குடியில் மாசி களரி உற்ஸவ விழா

காஞ்சிரங்குடியில் மாசி களரி உற்ஸவ விழா

கீழக்கரை: காஞ்சிரங்குடி அருகே உள்ள மகா குலுமாவிளக்காளியம்மன் கோயிலில் மாசி களரி உற்ஸவ விழா நடந்தது. மூலவர்கள் வேலாயுத பெருமாள் அய்யனார், தர்மமுனீஸ்வரர், ஆஞ்சநேயர், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. காலை 8 மணி அளவில் பால்குடம், அக்னிசட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை லட்சுமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து காளியம்மன் கோயில் வரை பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். மாலையில் 108 விளக்கு பூஜையும் அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !