பழநி மாரியம்மன் கோயிலில் இன்று தேரோட்டம்
பழநி: பழநி முருகன் கோயில் உப கோவிலான மாரியம்மன் கோயிலில் ஜன.28 முதல் மாசி திருவிழா நடைபெற்று வருகிறது. பிப்.,1 ல் திருக் கம்பம் தயாரித்து பிப்.,2 அதிகாலை மாரியம்மன் கோயில் முன் அலங்கரிக்கப்பட்ட கம்பம் நடப்பட்டது. பிப்., 8 அன்று கொடியேற்றம் நடந்தது. த கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது அதன்பின் பொதுமக்கள் அங்கப்பிரதட்சனம், தீர்த்த குடம் எடுத்தல் மற்றும் தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். சிம்ம, வெள்ளி ரிஷப, யானை, தங்க குதிரை வாகனங்களில் மாரியம்மன் புறப்பாடு தினமும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக (பிப்., 15) நேற்று மார்க்கண்டேயன் கோயிலில் இருந்து பொட்டும் காரையும் கொண்டு வரப்பட்டது. திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்: இன்று(பிப் 16) அதிகாலை அம்மன் கோவில் வருதல் பாதிரி பிள்ளையார் கோவிலில் இருந்து தீர்த்தம் கொடுத்தல் நடைபெறும். மாலை அம்மன் திருத்தேரில் எழுந்தருளி வடம் பிடித்தல் நடைபெறும். வழிகாட்டுதல் நெறிமுறை படி குறைவான பக்தர்களே அனுமதிக்கப்பட உள்ளனர். இரவு வண்டி கால் பார்த்தல் நடைபெறும். பிப்., 17.ல் தெரு கம்பத்தை கங்கையில் சேர்த்தல் நடைபெற்று, இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். விழா ஏற்பாடுகள் கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் நடைபெறும்.