உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் மாசி மக விழா

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் மாசி மக விழா

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் மாசி மாத பவுர்ணமியில் வரும் மக நட்சத்திரத்தை முன்னிட்டு மாசிமக விழா நடந்தது. காலை 10 மணி அளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிஜெகநாத பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. கோயில் பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பேஸ்கர் கண்ணன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !