உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லிவாக்கம் பெருமாள் கோவிலில் தெப்பம் உற்சவம் விழா

வில்லிவாக்கம் பெருமாள் கோவிலில் தெப்பம் உற்சவம் விழா

 வில்லிவாக்கம்:  வில்லிவாக்கத்தில், பிரசித்தி பெற்ற சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில், இன்று முதல் மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் விழா நடக்கிறது.வில்லிவாக்கத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும், சவுமிய தாமோதர பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தெப்ப உற்சவம் விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி, இன்று முதல் நாளை மறுநாள் வரை, மூன்று நாட்கள் மாலை, 7:00 மணிக்கு, கோவிலில், நிலைத் தெப்பம் உற்சவ விழா நடைபெறுகிறது.இக்கோவிலின் குளத்தின் படிக்கட்டுகளில் திருப்பணிகள் செய்ய வேண்டி உள்ளதால், கடந்த ஆண்டை போல, இந்தாண்டும் நிலை தெப்பம் நடக்கிறது.இன்று சகடாசுத வதம் என்ற திருக்கோலத்திலும், நாளை பகாசுர வதம் கோலத்திலும், நாளை மறுநாள் ராமகிருஷ்ண கோவிந்தன் கோலத்திலும், பெருமாள் திருவீதி புறப்பாடு நடக்கிறது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !