உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இம்மையில் நன்மை தருவார் கோயில் மாசித்தேரோட்டம்

இம்மையில் நன்மை தருவார் கோயில் மாசித்தேரோட்டம்

மதுரை: மதுரை  இம்மையிலும் நன்மை தருவார் கோயில் மாசி  திருவிழாவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டிஎஸ்கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் 1431 பசலி மாசி  திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமி வெவ்வேறு வாகனத்தில் அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று (16ம் தேதி)  நடைபெற்றது. மத்தியபுரி அம்மன் , பிரியாவிடை யுடன் சுவாமி அருள்பாலித்தார். அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் இறைவன் இறைவியை தரிசனம் தரிசனம் செய்தனர்.  விழா ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவமும், கோயில் நிர்வாகத்தினரும் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !