உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி தேரோட்டம் விமரிசை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி தேரோட்டம் விமரிசை

தூத்துக்குடி: சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவில் தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

தூத்துக்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு அபிசேகம், ஆராதனை நடந்தது. சுவாமி, அம்பாள் வெவ்வேறு சப்பரங்களில் தினமும் வீதி உலா வந்தனர். 10ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு அபிஷேகம் நடந்தது. 6:30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. முதலில் விநாயகர் தேரும் தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் தேர்களை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். காலை 9:15 மணிக்கு மூன்று தேர்களும் நிலையம் சேர்ந்தன. விழாவில் தர்மபுரம் ஆதீனம் திருஞானசம்பந்தர் தம்பிரான் சுவாமி ஆர்டிஓ கோகிலா, ஏஎஸ்பி ஹர்சிங், கோயில் இணை ஆணையர் குமர துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !