நெல்லையப்பர் கோவிலில் அப்பர் தெப்ப உற்சவம் நடந்தது
ADDED :1432 days ago
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் தெப்ப உற்சவம் நேற்று இரவு சிறப்பாக நடந்தது.
சைவ சமயக் குரவர்களில் ஒருவரான அப்பர் சமண மதத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறியதும் சமணர்கள் பல்வேறாக துன்புறுத்தினர். அவரை கல்லுடன் சேர்த்து கட்டி கடலில் வீசினர். அப்பர் சிவபெருமானை வேண்டிப் பாடினார். அப்போது கல் தெப்பமாக மாற்றிக் கடலில் மிதந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் அப்பர் தெப்ப உற்சவ விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு விழா இன்று நேற்று இரவு அம்மன் சன்னதி அருகே பொற்றாமரை குளத்தில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.