சுவாமிக்கு அணிவித்த மாலைகளை என்ன செய்ய வேண்டும்?
ADDED :1363 days ago
சுவாமிக்கு அணிவித்த மலர்களுக்கு நிர்மால்யம் என்று பெயர். நிர்மால்யம் என்பதற்கு தூய்மைப்படுத்தப்பட்டது என்று பொருள். எனவே, இவற்றைக் கண்ணில் ஒற்றிக் கொண்டால் அவற்றின் மூலம் நாமும் புனிதமடைகிறோம். அவற்றைப் பெண்கள் தலையில் சூடிக் கொள்ளவேண்டும். இந்த மலர்களை காலில் மிதிபடாத இடங்களில் மட்டுமே போட வேண்டும்.