உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் தெப்போற்சவம்

திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் தெப்போற்சவம்

காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோவில் மாசிமகப்பிரும்மோற்சவம் விழாவை முன்னிட்டு தெப்போற்சவம் நடந்தது.

காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோவிலில் மாசிமகப்பிரும்மோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு மற்றும் ரிஷபக் கொடியேற்றுதல் விழா துவக்கியது. 8ம் தேதி சூரியப்பிறையில் சுவாமி வீதியுலா, கடந்த 9ம் தேதி சந்திரப்பிறை நடந்தது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தியாகராஜர் புறப்பாடு வசந்த உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 15ம் தேதி மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு தேர்திருவிழா நடந்தது. 16ம் தேதி புஷ்ப பல்லாக்கு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று சந்திரசேகர சுவாமி அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளினார்.இதில் தொகுதி எம்.எல்.ஏ., நாகதியாகராஜன்,பா.ஜ.க.,பிரமுகர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !