விளாச்சேரி வெங்கடேச பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :1363 days ago
திருநகர்: திருநகர் விளாச்சேரி பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜைகள் முடிந்து மூலவர்கள் விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பூமி, நிலா, வெங்கடேசப்பெருமாள், கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிக்கு அபிஷேகம் முடிந்து வெள்ளி கவசங்கள் சாத்துப்படியாகி பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் உற்சவர்கள் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது, கோயில் நிர்வாகிகள் குணசேகரன், ஆறுமுகம், ராமலிங்கம் பூஜை ஏற்பாடுகள் செய்தனர்.