சிறுமலை சித்தர் பீடத்தில் சங்கடகர சதுர்த்தி- கோ பூஜை
ADDED :1365 days ago
சாணார்பட்டி: சிறுமலையில் உள்ள அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கோ பூஜை நடந்தது. முன்னதாக சித்தர் பீடத்தில் உள்ள சிவசக்தி ரூபிணி அம்மனுக்கு பால், பழம் ,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. பின் அம்மனுக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாதாரணை மட்டும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள பசு மாடுகளுக்கு கோ பூஜை செய்யப்பட்டு, பசுக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு சிவசக்தி ரூபினி அம்மனை தரிசித்தனர்.