உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூரில் தெப்ப உற்ஸவம் முடிந்தும் குறையாத பக்தர்கள்

திருக்கோஷ்டியூரில் தெப்ப உற்ஸவம் முடிந்தும் குறையாத பக்தர்கள்

திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவம் முடிந்த பிறகும் சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் வருகை குறையவில்லை. இக்கோயிலில் 11 நாள் தெப்ப உற்ஸவம் பிப்.17 ல் நிறைவடைந்தது. இருப்பினும் தெப்பக்குளம் அருகில் தீபம் ஏற்றி பெண்கள் வழிபடுவதும், கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதும் தொடர்கிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் இரவு வரை திரளாக பக்தர்கள் நீண்ட வரிசைகளில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !