கயிலாசநாதர் கோவிலில் அன்னதான உண்டியல் எண்ணும் பணி
ADDED :1366 days ago
காரைக்கால்: காரைக்கால் கயிலாசநாதர் கோவில் நேற்று அன்னதான உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள கயிலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான அம்மையார் கோவில், நித்யகல்யாணப்பெருமாள், ஆற்றங்கரை விநாயகர் உள்ளிட்ட 8க்கு மேற்பட்ட கோவில்களில் பக்தர்கள் அன்னதானம் உள்ளிட்ட காணிக்கை அளிக்க வகையில் பல இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது.கோவில் உண்டியல் நிரம்பியது.நேற்று கைலாசநாதர் கோவிலில் காலை துவக்கியது. இதை கோவில் அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் காணிக்கை உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர்.