வடுகபட்டி லட்சுமி கணபதி கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :1366 days ago
பெரியகுளம்: வடுகபட்டியில் ஸ்ரீ லட்சுமி கணபதி திருக்கோயில் கும்பாபிஷேகம் கோலகலமாக நடந்தது.
பெரியகுளம் அருகே வடுகபட்டி ஸ்ரீ லட்சுமி கணபதி திருக்கோயில் கும்பாபிஷேகம் மற்றும் தெலுங்கு செட்டியார்கள் அசோசியேஷன் வணிக வளாகம் திறப்பு விழா நடந்தது. முன்னதாக மங்கள இசையுடன் துவங்கிய கும்பாபிஷேக விழா, கணபதி, நவக்கிரக, லட்சுமி ஹோமங்கள் நடந்தது. கோபுர கலசத்திற்கு புனித நீரினை சிவாச்சாரியர்கள் ஊற்றினர். அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வடுகபட்டி, சேடபட்டி 24 மனை தெலுங்கு செட்டியார்கள் உறவின் முறையினர் செய்திருந்தனர்.