உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி திருவிழா

ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி திருவிழா

ராமேஸ்வரம்: மாசி மகாசிவராத்திரி விழா யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருவிழா கொடி ஏற்றப்பட்டு, விழா துவங்கியது.

மாசி சிவராத்திரி விழாவுக்கு நேற்று காலை 10 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சுவாமி சன்னதி எதிரே உள்ள அலங்கரிக்கப்பட்ட கொடி மரகம்பத்தில் கோயில் குருக்கள் மந்திரம் முழங்க திருவிழா கொடியை ஏற்றினர். இதனைதொடர்ந்து அலங்காரிக்கப்பட்ட பல்லாக்கில் வீற்றிருந்த சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் பழனிகுமார், தக்கார் குமரன்சேதுபதி, கோயில் மேலாளர் சீனிவாசன், பேஸ்கார்கள் கமலநாதன், அண்ணாதுரை, பா.ஜ., மாவட்ட தலைவர் முரளீதரன், பா.ஜ., துணை தலைவர் ராமு, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !