லட்சுமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :1365 days ago
கீழக்கரை: கீழக்கரை அருகே லட்சுமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. கடந்த ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டு மார்ச் 3 அன்று கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, மஹா கணபதி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை வேள்வி நடந்தது. மூலவர்கள் முத்துமாரியம்மன், முருகன், விநாயகர், கருப்பண்ணசாமி, முனீஸ்வரர், பத்திரகாளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பூஜைகளை நாகர்கோயில் சந்திரசேகர செல்லமணி சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர். ஏற்பாடுகளை லட்சுமிபுரம் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் ராமசாமி, முனியசாமி, செல்வராஜ், நாகநாதன், விஜயகுமார், கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர். மாலையில் நடந்த விளக்கு பூஜை, மாங்கல்ய பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.