உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோனியம்மன் கோவிலில் தேர் திருவிழா கொடியேற்றம்

கோவை கோனியம்மன் கோவிலில் தேர் திருவிழா கொடியேற்றம்

கோவை: கோவை கோனியம்மன் கோவில் தேர்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி, வெகு சிறப்பாக நடந்தது.


கோனியம்மன் தேர்திருவிழா கடந்த, 14ம் தேதி, முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று இரவு, 7:00 மணிக்கு வெகு விமர்சையாக நடந்தது.வெள்ளை நிற துணியில் சிம்மவாகனமும், சூலாயுதமும் மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் வரைத்து உருவாக்கப்பட்ட கொடியை, அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து, மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் சொல்லி, கொடியை ஏற்றி வைத்தனர். பின்னர் கோனியம்மனுக்கு புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து விநாயகர், சூலதேவர் சப்பரத்தில் எழுந்தருள, வீதி உலா துவங்கியது. கோவிலில் இருந்து சப்பரம் மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு, பெரிய கடைவீதி, வைசியாள் வீதி, ராஜவீதி, தேர்நிலைத்திடல் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனின் அருளை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !