பழநி மாரியம்மன் கோவில் திருவிழா பால்குட ஊர்வலம்
ADDED :1364 days ago
பழநி: பழநியில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நிறைவு பெற்றதை முன்னிட்டு உற்சவ சாந்தி நிகழ்ச்சியில் அம்மனுக்கு 1008 பால் குடங்கள் பாபுஜி மன்ற தலைமையகம் சார்பில் எடுக்கப்பட்டது. அம்மனுக்கு உற்சவ சாந்தி அபிஷேகம் நடைபெற்ற பின் அன்னாபிஷேகம் நடைபெற்று மகேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டது. தீபாராதனை நடந்தது. இதில் சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேல், கார்த்திகேயன், ராஜா,மன்றத் தலைவர் அசோக், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் சுந்தர், நிர்வாகிகள் முருகேசன், குகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.