உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவிலில் வருடாபிஷேக விழா

விநாயகர் கோவிலில் வருடாபிஷேக விழா

பாகூர்:  குடியிருப்புபாளையம் வரசித்தி விநாயகர் கோவிலில், வருடாபிஷேக விழா நடந்தது.பாகூர் அடுத்த குடியிருப்புபாளையத்தில் வரசித்தி வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது.இக்கோவிலில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி, முதலாமாண்டு வருடாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.காலை 7.00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, 108 சங்கு ஸ்தாபனம், கலச பூஜை மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !