உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்கள் அபிவிருத்தி புதிய திட்டம் துவக்கம்

கோவில்கள் அபிவிருத்தி புதிய திட்டம் துவக்கம்

பெங்களூரு: கர்நாடகாவில், கோவில்களின் அபிவிருத்திக்காக வகுக்கப்பட்டுள்ள, தெய்வ சங்கல்பா என்ற புதிய திட்டத்தை, முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று துவங்கினார்.துவக்க நிகழ்ச்சியில், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே பேசியதாவது:காசியை அபிவிருத்தி செய்ததை போல கர்நாடகாவின் அனைத்து கோவில்களையும் அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், பக்தர்களை ஈர்க்கவும், முதற்கட்டமாக, 25 கோவில்களின் அபிவிருத்திக்காக, தெய்வ சங்கல்பா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஐ.டி.எம்.எஸ்., எனும் இன்டகிரேடட் டெம்பில் மேனேஜ்மென்ட் சிஸ்டம் இணைய தளம் அறிமுகம் ஆவதால், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அனைத்து விபரங்களும் விரல் நுனியில் கிடைக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவை நனவாக்க, அறநிலையத்துறை முயற்சிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !