கிளி வாகனத்தில் கோனியம்மன் வீதி உலா
ADDED :1354 days ago
கோவை: கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் தேர்திருவிழா, கடந்த, 14ம் தேதி, முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கி, வெகு சிறப்பாக நடந்து வருகிறது. நேற்று இரவு, 7:00 மணியளவில் கோனியம்மன் கிளி வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அம்மன் கிளி வாகனத்தில் எழுந்தருளி, கோவிலில் இருந்து இசை வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு, பெரிய கடைவீதி, வைசியாள் வீதி, ராஜவீதி, தேர் நிலைத்திடல் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த வீதி உலா நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனின் அருளை பெற்றனர்.