உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவிலில் ரூ.1.36 கோடி காணிக்கை

மாசாணியம்மன் கோவிலில் ரூ.1.36 கோடி காணிக்கை

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பக்தர்களால், 1.36 கோடி ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, 22 நிரந்தர உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. கோவில் உதவி ஆணையர் கருணாநிதி, தேக்கம்பட்டி உதவி ஆணையர் ஹர்சினி, பேரூர் சரக ஆய்வர் கீதா, அன்னுார் சரக ஆய்வர் மல்லிகா, கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோகநாதன் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது.நிரந்தர உண்டியல்களில், ஒரு கோடியே, 36 லட்சத்து, 473 ரூபாயும்; 372.150 கிராம் தங்கம் மற்றும் 2.57 கிலோ வெள்ளி இருந்தது. மாசாணியம்மன் குண்டம் திருவிழா நடந்ததால், லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்தனர். பக்தர்கள் அதிகளவில் காணிக்கை செலுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !