அங்காள பரமேஸ்வரி கோவில் சிவராத்திரி உற்சவம் துவக்கம்
ADDED :1363 days ago
விருத்தாசலம், : விருத்தாசலம் சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மகா சிவராத்திரி ரணகளிப்பு உற்சவம் துவங்கியது.இதையொட்டி, நேற்று காலை 7:00 மணியளவில், மணிமுக்தாற்றில் சிறப்பு பூஜைகளுடன் சக்தி கரகம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் அம்மனுக்கு கொடியேற்றி, காப்பு கட்டப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இரவு சுயரூபத்துடன் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.முக்கிய நிகழ்வாக, வரும் 1ம் தேதி பிற்பகல் 12:00 மணியளவில், குறத்தி வேடத்தில் குறி சொல்தும் அம்மன் வீதியுலா, நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 2ம் தேதி மயானக்கொள்ளை, 6ம் தேதி செடல் திருவிழா, 7ம் தேதி சந்தன நிராமணி, திருவிளக்கு பூஜை, இரவு ஊஞ்சல் உற்சவம், அம்மன் வீதியுலாவுடன் நிறைவு பெறுகிறது.