உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னாரம்பட்டி பகவதியம்மன் கோயில் திருவிழா

குன்னாரம்பட்டி பகவதியம்மன் கோயில் திருவிழா

கொட்டாம்பட்டி: குன்னாரம்பட்டி பகவதியம்மன் கோயிலில் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி மாசி திருவிழா கொண்டாடப்படுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக நாளை (பிப்.27) மந்தைக்குளத்தில் இருந்து அம்மனை அலங்கரித்து தேரில் ஊர்வலமாக கோயிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிப்.28ல் பக்தர்கள் பால்குடம், மாவிளக்கு எடுத்தும், கிடா வெட்டி பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பிறகு கோயி்ல் அருகில் உள்ள அம்மன் ஊருணியி்ல் தேரில் வந்த அம்மனை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவில் கொட்டாம்பட்டி பகுதியை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !