பூரணாங்குப்பம் தேர் திருவிழா: தார் சாலை அமைக்கும் பணி
ADDED :1362 days ago
அரியாங்குப்பம், : பூரணாங்குப்பம் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, தார் சாலை அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
மணவெளி தொகுதி, பூரணாங்குப்பத்தில் அங்காளபரமேஸ்வரி கோவில் தேர் திருவிழா நடக்கிறது. அதனை முன்னிட்டு, தேரில் சாமி வீதியுலா நடைபெற உள்ளதால், நடுத்தெரு, தெற்கு தெரு, திரவுபதி அம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் புதியதாக தார் சாலை அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி பொறியாளர் கோபி, இளநிலை பொறியாளர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.