சக்தி வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா அரிவாள் ஏணியில் நின்று அருள்வாக்கு
ADDED :1362 days ago
காரைக்குடி: காரைக்குடி பர்மா காலனியில் உள்ள சக்தி வீரமா காளியம்மன் கோயிலின் 17வது ஆண்டு திருவிழா கடந்த மார்ச் 15-ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மார்ச்.24 மது முளைப்பாரியுடன் சக்தி வீரமா காளி பவனி வரும் காட்சியும், திருவீதி உலாவும் நடந்தது. அன்று இரவு அரிவாள் ஏணியில் சாமியார் நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது.