உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹா சிவராத்திரி, குலதெய்வக் கோயில் வழிபாடு எதிரொலி, பூ, பூஜை சாமான்கள் விலை உயர்வு

மஹா சிவராத்திரி, குலதெய்வக் கோயில் வழிபாடு எதிரொலி, பூ, பூஜை சாமான்கள் விலை உயர்வு

மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் மகாசிவராத்திரி மற்றும் குலதெய்வ கோயில்களில் பக்தர்கள் வழிபாடு செய்யப்படுவதை ஒட்டி பூ மற்றும் பூஜை சாமான்களின் விலை உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் மகாசிவராத்திரி திருநாள் மற்றும் குல தெய்வ கோவில்களில் வழிபாடு நடைபெற உள்ளது. இதையடுத்து மகாசிவராத்திரியன்று சிவன் கோயில்களில் இரவு முழுவதும் 4 கால பூஜை நடைபெறுவதை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து இரவு முழுவதும் தங்கியிருந்து சுவாமியை வழிபட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காததால் மகா சிவராத்திரி திருவிழா பக்தர்களின்று நடைபெற்றது. இந்நிலையில் இந்தாண்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவர்.மேலும் மானாமதுரை மற்றும் இளையான்குடி பகுதிகளில் உள்ள தங்களது குலதெய்வ கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள் வெளியூர்களிலிருந்து வந்து சாமி தரிசனம் செய்வதற்கும் வந்த வண்ணம் உள்ளனர்.இதையடுத்து பூஜைக்கு தேவையான பூ மற்றும் மாலைகள் தேங்காய்,வாழை பழம் மற்றும் பூஜை பொருட்களின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது.இது குறித்து பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் சரவணன் கூறுகையில்,மகாசிவராத்திரி மற்றும் குலதெய்வ கோயில் வழிபாடுகளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பூஜை பொருட்களை வாங்க வருவதால் பூஜை பொருட்களின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது.குறிப்பாக தேங்காய் மற்றும் வாழைப்பழங்களின் விலை உயர்ந்துள்ளது இதேபோன்று பூ கடைகளிலும் பூ மற்றும் மாலைகளின் விலையும் உயர்ந்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !