உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடைவிழா தொடங்கியது

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடைவிழா தொடங்கியது

நாகர்கோவில்: பெண்களின் சபரிமலை என்று புகழப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கேரளாவில் இருந்து பெண்கள் இருமுடி கட்டு ஏந்தி வந்து கடலில் குளித்து அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுவதால் இது பெண்களின் சபரிமலை என்று புகழப்படுகிறது. இங்கு மாசி கொடை விழா நேற்று காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ைஹந்தவ ஹிந்து சேவா சங்கம் சார்பில் பத்து நாள் நடைபெறும் ஹிந்து சமய மாநாட்டை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

விழாவில் தினமும் சிறப்பு பூஜைகளும், அம்மன் பவனியும் நடக்கிறது. ஆறாம் திருவிழாவான மார்ச்4 இரவு வலிய படுக்கை என்ற மகா பூஜை நடக்கிறது. ஒன்பதாம் நாளான மார்ச் 7 ல் சக்கரதீவெட்டி ஊர்வலம் நடக்கிறது. மார்ச்8 ல் நள்ளிரவு ஒரு மணிக்கு ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. பாதுகாப்பு பணியில் சிவகங்கை,விருதுநகர் உள்பட தென்மாவட்டங்களிலிருந்து ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !