உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாசிவராத்திரி : செத்தவரை சொக்கநாதர் கோவிலில் கயிலாய வாயில் திறப்பு

மகாசிவராத்திரி : செத்தவரை சொக்கநாதர் கோவிலில் கயிலாய வாயில் திறப்பு

செஞ்சி: செத்தவரை சொக்கநாதர் கோயிவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாய சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செத்தவரை நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள மீனாட்சி உடனாகிய சொக்கநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாய சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. இதை முன்னிட்டு சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். மாலை 6 மணிக்கு உற்சவர் மீனாட்சி உடனாகிய சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் கைலாய சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். சிவஜோதி மோன சித்தர் தலைமையில் பக்தர்கள் சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் செய்து வழிபட்டனர். தொடர்ந்து ரதத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !