குட்லாடம்பட்டியில் மஹா சிவராத்திரி விழா
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி ஐந்துகுழி கண்மாய் ரோட்டில் உள்ள லலிதாம்பிகேஸ்வரர், லலிதாம்பிகேஸ்வரி கோயிலில் மாசி மஹா சிவராத்திரியை முன்னிட்டு சுவாமி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. நேற்று மாலை ஆறுகால பூஜை துவங்கியது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர். அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் கோபிநாத் செய்திருந்தார்.
சோழவந்தான்: சோழவந்தான் பிரளயநாதர் சிவன் கோயிலில் பிப்.,28 சோமவார பிரதோஷ உற்சவம் நடந்தது. நேற்று இரவு நான்கு கால பூஜைகள் துவங்கியது. சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. திருவாலவயநல்லுரர் மந்தை கருப்புசாமி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நேற்று மாலை நான்கு கால பூஜைகள் துவங்கியது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை பூஜாரி கணேசன் மற்றும் கிராமத்தினர் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.