படுக்கப்பெத்து அம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா
ADDED :1350 days ago
பெருநாழி: பெருநாழி அருகே டி.கரிசல்குளத்தில் உள்ள படுக்கப்பெத்து அம்மன் கோயிலில் 25ஆவது வருடாந்திர மாசி மகா சிவராத்திரி விழா நடந்தது. கடந்த பிப்., 22 காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மாலை 6 மணி அளவில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இரவில் சிறுமிகளின் கும்மி, கோலாட்டம் நடந்தது. நேற்று விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்டவைகளும் விநாயகர் கோயிலில் இருந்து முளைப்பாரி, பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செய்தனர். அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், குலதெய்வ குடிமக்கள் செய்திருந்தனர்.