மாசி களரி விழா: பனை ஓலையில் அன்னதானம்
ADDED :1350 days ago
சேதுக்கரை: சேதுக்கரை அருகே பஞ்சந்தாங்கி கிராமத்தில் உள்ள பாப்பாத்தி காளியம்மன் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு மாசி களரி உற்ஸவ விழா நடந்தது. மூலவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பெண்கள் பொங்கலிட்டனர். கோழி, சேவல்கள் பலியிடப்பட்டு விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பனைஓலை பட்டையின் மூலமாக அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை முருகாண்டி செய்திருந்தார். ஏராளமான கிராம மக்கள் விழாவில் பங்கேற்றனர்.