உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயிலில் மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை

பழநி மலைக்கோயிலில் மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை

பழநி: பழநி மலைக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

பழநி மலைக் கோயிலில் இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவில் மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. சிவ பூஜை, வைதிகாள் அலங்காரம் சிறப்பு தீபாராதனை முதல் காலம் இரவு 8 மணிக்கும், இரண்டாம் காலம் இரவு 11 மணிக்கும் மூன்றாம் காலம் நள்ளிரவு 1 மணிக்கு நடைபெறும். அதிகாலை 3 மணியளவில் நான்காம் காலம் பூஜை புஷ்ப அலங்காரத்தில், சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதன்பின் அர்த்தஜாம பூஜை நடைபெற்று சுவாமி பள்ளியறை பூஜை, புறப்பாடு நடைபெற்று சன்னதி திறக்கப்படும். மலைக் கோயிலில் அமைந்துள்ள கைலாச நாதர் சன்னதியில் மேற்கண்டவாறு நான்கு காலங்களிலும் மகா சிவராத்திரி பூஜைகள் நடைபெறும். பக்தர்கள், படிப்பாதை, யானைப் பாதையில் பயன்படுத்தி மலைக்கோயில் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும். இரவு நேரத்தில் வின்ச், ரோப் கார் சேவை இயங்காது என இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !