உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈஷா மஹாசிவராத்திரி விழா: துணை ஜனாதிபதி வாழ்த்து

ஈஷா மஹாசிவராத்திரி விழா: துணை ஜனாதிபதி வாழ்த்து

தொண்டாமுத்தூர்: மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, கோவை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுக்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் நேபாள் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சர்மா ஒலி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அனுப்பியுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:

ஈஷாவில் நடக்கும் மகாசிவராத்திரி விழா கொண்டாட்டம், உலகம் முழுவதும் இருந்து வரும் சிவ பக்தர்களுக்கு அனைத்து விதமான கலாச்சார தடைகளையும் தாண்டி, தெய்வீக மற்றும் தனித்துவமான சூழ்நிலையை வழங்குகிறது. இந்த நன்னாளில், சிவபெருமான் நம் அனைவருக்கும் தனது தெய்வீக ஆசிகளை வழங்கி, உண்மை, தூய்மை மற்றும் தெய்வீக தன்மையுடன் முன்னேற்றம் பெற வழியை தரட்டும். இவ்வாறு துணை ஜனாதிபதி வீடியோவில் கூறியுள்ளார். அதேபோல, நேபாள் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சர்மா ஒலி, சத்குருவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியுள்ளதாவது: மகா சிவராத்திரி விழா நேபாள் மற்றும் இந்தியாவில் மிகுந்த முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது. நேபாள் ராணுவம், மகா சிவராத்திரி தினத்தை ராணுவ தினமாக கொண்டாடுகிறது. சிவனை யோகத்தின் மூலமாகவும், ஆதியோகியாகவும் ஏற்றுக்கொண்டவர்கள் அவர் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கிறார் என நம்புகின்றனர். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !