மாசி மகா சிவராத்திரி விழா : சிவன் கோயில்களில் கோலாகலம்
ADDED :1396 days ago
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுரேஷ், அன்பர் பணிசெய்யும் பராமரிப்பு குழுத்தலைவர் வி.ப.ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார்,பொருளாளர் விஜயராணி ஆகியோர் செய்திருந்தனர். வீரராஜ், ராம தண்டபாணி அன்னதானம் வழங்கினர்.
* பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. சிவன்,அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.
* பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோவில் மகா சிவராத்திரி விழா நடந்தது.