உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் தேர் திருவிழா துவக்கம்

முத்துமாரியம்மன் தேர் திருவிழா துவக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் சக்தி அழைத்தல் வைபவத்திற்கு பின் உட்காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (13ம் தேதி) முதல் வரும் 24ம் தேதி வரை தினமும் இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. 21ம் தேதி காத்தவராய சுவாமி ஆர்யமாலா திருக்கல்யாணமும், 25ம் தேதி தேர் திருவிழாவும் நடக்கிறது.ஏற்பாடுகளை அறங்காவலர் நற்குணம் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !