உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

காளஹஸ்தி சிவன் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

காளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளான இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை  தேர் திருவிழா நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தேர் திருவிழாவில் கலந்து கொள்ள காளஹஸ்தி மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களிலிருந்தும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் திருவிழாவின் போது பக்தர்கள் தங்களுடைய கோரிக்கைகளை தீர்க்க வேண்டி உப்பு மற்றும் மிளகு தேர்களின்  மீது தெளித்து தங்கள் தங்கள் கோரிக்கைகளை வேண்டினர். தேரோட்டத்தின்போது கேரளா செண்டை மேளம்,மங்கல வாத்தியங்கள், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் மற்றும் பக்தர்கள் பல்வேறு சுவாமி அம்மையார் வேடமணிந்து நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது . இதில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக.ஸ்ரீனிவாசுலு , சிவன் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !