சிவாலயங்களில் சிவராத்திரி பூஜை
ADDED :1348 days ago
சூலூர்: சூலூர் வட்டார சிவன் கோவில்களில் நடந்த சிவராத்திரி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் வட்டாரத்தில், சூலூர் வைத்தியநாத சுவாமி, கருமத்தம்பட்டி, சென்னியாண்டவர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றவை. இங்கு சிவராத்திரியை ஒட்டி, நான்கு கால பூஜைகள் நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு துவங்கி, நேற்று காலை வரை நடந்த கால பூஜைகளில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சூலூர் சிவன் கோவிலில் திருப்பணிகள் நடப்பதால், இளங்கோவிலில் மட்டும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆன்றோர்களின் பக்தி சொற்பொழிவு மற்றும் பஜனை நடந்தது. பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் நடக்கும், 12 ஜோதிர் லிங்க தரிசன நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.