மஹா சிவராத்திரி, வேடமிட்டு வந்த சிறுவர்கள்
ADDED :1348 days ago
திருப்புவனம்: நாடு முழுவதும் மஹா சிவராத்திரி நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. திருப்புவனம் திருப்புவனம் அருகே வில்லியாரேந்தல் ஊர்காவலன் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு கிராமமக்கள் பூத்தட்டு ஏந்தி கிராமத்தை வலம் வந்தனர். நேர்த்திகடன் விரதமிருந்த சிறுவர் சிறுமியர்கள் கருப்பசாமி வேடமிட்டும், அம்மன் வேடமிட்டும் வலம் வந்தனர். நள்ளிரவு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை வில்லியாரேந்தல் கிராமத்தினர் செய்திருந்தனர்.