நான் என்ற எண்ணம் கொண்டவர் வாழ்ந்ததில்லை
* ‘நான்’ என்னும் அகந்தையை கைவிடுங்கள். மகிழ்ச்சியாக வாழலாம்.
* பல சாதனைகளை புரியவே கடவுள் உன்னை படைத்திருக்கிறார்.
* பெற்றோரை சந்தோஷப்படுத்து. கடவுளும் மகிழ்ச்சி அடைவார்.
* என்னால் எதையும் செய்ய முடியும் என நம்பு.
* பிறரது விமர்சனத்தை பொருட்படுத்தாமல் கடமையில் கண்ணாக இரு.
* ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபடு. அது வளமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும்.
* மரணத்திற்கு பின்பும், நல்ல ஒழுக்கமே உன்னைத் தொடரும்.
* நியாயத்தை சொல்வதில் கோழையாக இருக்காதே. அதற்காக சண்டையிடவும் தயங்காதே.
* பிறரது பாராட்டு, விமர்சனத்தை கேட்டால், உன்னால் மகத்தான செயல்களை செய்ய முடியாது.
* ஒன்றைப் பெற்றுக் கொள்வதில் பெருமையில்லை. கொடுப்பதே உண்மையான பெருமை.
* எப்போதும் பிறரை குறை கூறிக்கொண்டே இருப்பவனிடம் சேராதே.
* தாழ்ந்த நிலையில் இருந்து மேலான நிலைக்குப் பயணம் செய்வதே வாழ்வின் நோக்கம்
* உன்னை நீ வெறுத்தால் அழிவை நோக்கி செல்வதாக அர்த்தம்.
* தவறுக்காக வருந்தாதே. அதுவே உனக்கு வழிகாட்டும் தெய்வம்.
* வீணான பொழுது போக்குகளில் ஈடுபட்டால், மனதின் ஆற்றல் சிதறடிக்கப்படும்.
* பொறுமையாக இருப்பதே வெற்றிக்கான அடிப்படை என்பதை அறிந்துகொள்.
* மனவலிமையும், இரக்க குணமும் கொண்டவனே உண்மையான வீரன்.
* உன்னைத் தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது. - விவேகானந்தர்