சிவபூஜை செய்த சிவன்
ADDED :1394 days ago
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ஆனால் சிவன் தன்னைத் தானே பூஜை செய்து வழிபட்ட தலம் மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலாகும். சுவாமி சிவலிங்க வடிவில் இங்கிருக்கிறார். அவருக்கு பின்புறம் சிவபார்வதி சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. சிவபெருமானே மதுரையில் சுந்தரபாண்டியராக அரசாட்சி செய்கிறார். பாண்டிய அரசர்கள் ஆட்சி பீடத்தில் அமரும் போது சிவபூஜை செய்வது வழக்கம். இதனடிப்படையில் மதுரையில் பாண்டிய மன்னராக ஆட்சியில் அமர்ந்த சிவனும், பட்டாபிஷேகத்தின் போது தனக்குத் தானே பூஜை செய்து கொண்டதால் இவ்வாறு சன்னதி எழுப்பப்பட்டுள்ளது.