உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருமாத்தூர் கடசாரி நல்லகுரும்பன் கோயில் மாசிப்பெட்டிகள் திரும்பின

கருமாத்தூர் கடசாரி நல்லகுரும்பன் கோயில் மாசிப்பெட்டிகள் திரும்பின

உசிலம்பட்டி: கருமாத்தூர் கடசாரி நல்லகுரும்பன் கோயில் மகாசிவராத்திரி மாசிப்பச்சை திருவிழாவிற்காக சாமி பெட்டிகள் கொண்டு வரப்பட்டு சிவராத்திரி வழிபாடுகள் நடைபெற்றன. வழிபாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நேற்று மாசிப்பெட்டிகள் பெட்டி வீடுகளுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூசாரிகள், கோடாங்கிகள், சாமியாடிகள், பக்தர்கள் புடைசூழ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பூசாரிகள் முகத்தில் வாழை இலை கட்டிக்கொண்டு பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ பெட்டிபூசாரிகள் பெட்டிகளை எடுத்து பெட்டி வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !