சதுரகிரியில் 25 ஆயிரம் பேர் சாமி தரிசனம்
ADDED :1392 days ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் கடந்த 4 நாட்களில் 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இக்கோயிலுக்கு ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலை ஏற அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது மாசி மாதம் பிரதோசம், மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 28 முதல் நேற்று வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதில் பிரதோஷம் அன்று சுமார் 3000 பேரும், மகா சிவராத்திரியை முன்னிட்டு 13 ஆயிரம் பேரும், அமாவாசையை முன்னிட்டு 8 ஆயிரம் பேரும், நேற்று ஆயிரம் பேரும் என மொத்தம் 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.