உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலாபுரம் சாலைக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருமலாபுரம் சாலைக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

போடி: போடி திருமலாபுரம் நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சாலைக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி மூன்று நாட்களாக, கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, யாகசாலை பிரவேசம், விக்னேஷ்வர வழிபாடு, கும்ப வழிபாடு, தீபாரதனை, மூன்று கால பூஜைகள் நடந்தன. நேற்று காலை 8.50 மணிக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், மூலவர் அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானமும் வழங்கப்பட்டது. நகராட்சி தலைவர் பழனிராஜ், போடி பரமசிவன் கோயில் அன்னதான அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜபாண்டியர், துணைத்தலைவர் பழனிமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர். போடி -திருமலாபுரம் நாடார் உறவின் முறை தலைவர் சூரியன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பத்மநாபன், திருமலாபுரம் நாடார் இளைஞர் சங்கம், மாதர் சங்கம், நாடார் மேல்நிலை, மற்றும் தொடக்கப்பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், காமராஜர் மாணவர் விடுதி தலைவர் ஜெயபால், செயலாளர் சரவணகுமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரூபன், லட்சுமண முருகன், முருகேசன், நந்தகுமார், ஜெயசீலன். வெயிலேஸ்வரி விடுதி காப்பாளர் கினிஸ் மற்றும் விடுதி ஊழியர்கள், வர்த்தகர்கள் சங்க பொருளாளர் அய்யனார்,ராம் புரோட்டா ஸ்டால் உரிமையாளர் அருணாசலம், நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பிருதிவிராஜன்,எம்.வி. சிதம்பரம் சன்ஸ் உரிமையாளர் சுதர்சன், ஏலக்காய் வியாபாரி அய்யனார், நாடார் இளைஞர் சங்க தலைவர் செண்பகராஜ், ரியல் மீடியேட்டர்ஸ் தங்கப்பாண்டியன், ஏலவிவசாயி சிவக்குமார். சதியாஸ் திருமண மண்டப உரிமையாளர் சம்பத்சந்தியா, எம்.எம்.தங்க நகைக்கடன் உரிமையாளர் முத்துக்காளை, போடி ஏல விவசாயிகள் சங்க தலைவர் சுப்பரமணி, அணைக்கரைப்பட்டி ஊராட்சி தலைவர் லட்சுமிசரவணன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சற்குணம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !