உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவில் நிருத்திய சங்கமம் நடனம்

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவில் நிருத்திய சங்கமம் நடனம்

சிதம்பரம்: சிதம்பரத்தில் 4 ம் நாள் நாட்டியாஞ்சலி விழாவில் நிருத்திய சங்கமம் விழா நடந்தது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பாண்டியன் பங்கேற்றார்.

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 41ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா 1 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று நடந்த 4 ம் நாள் விழாவில் முக்கிய நிகழ்வாக ஐந்து நாட்டியமும் ஒரே மேடையில் நடக்கும் வகையில் நிருத்திய சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. நேற்றைய விழாவில் 6.15 க்கு திருச்சி நிருத்திய சாந்தி கலைக்கூடம் மாணவர்கள் பரதம், 6.45 க்கு பெங்களூரு காயத்ரி குருபிரசாத் பரதம், 7.15 க்கு சிதம்பரம் தகதிமிதா நாட்டிய பள்ளி மாணவிகள் பரதம், 7.45 க்கு பரதம், மோகினி ஆட்டம், கூச்சுப்புடி, கதக், ஓடிசி ஆகிய 5 நடனங்களும் 3eg மேடையில் நிருத்திய சங்கமம் நடந்தது. 8.50 சென்னை தாஸ்யம் மையம் மோகினி ஆட்டம், 9.20 க்கு பெங்களூரு தீபா பத்மர் பரதம், 9.45 க்கு சென்னை அனன்யா ரவீந்திரன் பரதம் ஆடி நடனங்கள் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன், குமராட்சி ஒன்றிய சேர்மன் பூங்குழலி பாண்டியன் ஆகியோர் பங்கேற்று நடன கலைஞர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !